Search

Sruthi (ஸ்ருதி)

Blend of thoughts in tamil and english

அழகும் அழிவும் (Azhagum Azhivum)

மெல்லிய மலர் இதழ்களும்
கூவும் குயிலின் கானமும்
மூன்றாம் பிறை நிலவும்
எனக்கு உவமையாகவே உயிர் வாழ்கின்றன

பாரதி கண்ட புரட்சிப் பெண் என
பாரதிராஜா கண்ட கிராமத்துப் பதுமை என
பல கோலங்களை எனக்குச் சூடுவர்

அதில் அலங்கோலமும் ஒன்று !

நதி என்றும்
கடல் என்றும்
ஒப்பிடுவர் என்னை

அந்நீரைப் போலவே
நாடு நாடக
விலைப் பேசி
வியாபாரம் செய்வர் என்னை !

பூமாதேவியாகப் பூஜை செய்தாலும்

சிதைத்தல் பங்கிடுதல் போன்ற
பூமியை அழிக்கும் அனைத்து முறைகளும்
எனக்கும் பொருந்தும் !

நிலத்தின் எல்லையை
வேலி போட்டுக் காக்க தெரிந்த மனிதனுக்கு

பெண் கொடுமைக்கு ஒரு வேலி போட்டு
என்னைக் காக்கத் தெரியாமல் போனது ஏனோ…!

 

Melliya malar idhazhgalum
Koovum kuyilin gaanamum
Moonram pirai nilavum
Enaku uvamaiyagave uyir vazhgindrane

Bharathi kanda puratchi pen ene
Bharathiraja kanda gramathu padhumai ene
Pala kolangalai enaku sooduvar

Adhil alangolamum ondru !

Nadhi endrum
Kadal endrum
Oppiduvar ennai

Anneerai polave
Naadu naadaga
Vilai pesi viyabaram seivar ennai !

Boomaadheviyaga poojai seidhalum

Sidhaithal pangidudhal pondra
Boomiyai azhikum anaithu muraigalum
Enakum porundhum !

Nilathin ellaiyai
Veli potu kaaka therindha manidhanuku

Pen kodumaiku oru veli potu
Ennai kaaka theriyamal ponadhu yeno… !

The End Where I Begin

A thoughtful post !

 

Source: The End Where I Begin

பாதுகாத்த பைரவன் ( Paadhukaatha Bairavan )

அலுவலக வேலை முடிந்து
அயர்ந்துப் போன நிலையில்
வீட்டை நோக்கி
விரைந்து கொண்டிருக்கும் வேலையில்
விளக்குகள் அணைந்திருந்த சாலை
விண்ணில் துளி வெளிச்சம் இல்லாத மாலை

இருட்டின் பாதையில்
இரு சக்கர வாகனங்கள்
குடிப் போதையில்
கூத்தாடும் மனிதர்கள்

கடந்து செல்ல நெனைக்கும்பொழுதே
கலங்கி நின்றது என் கண்கள்

கையில் இருந்த ஒரே ஆயுதம்
என் கைபேசி

தொலைக்காட்சியின் சத்தத்தில்
தொலைபேசியின் அழைப்புக் கேட்கவில்லை
என் அன்னைக்கு

அலைபேசியின் அலைகள்
அடைய முடியாத தொலைவில்
என் தந்தை

எந்நேரமும் கடலைப் போடும்
என் நண்பர்களும் எடுக்க வில்லை
என் அழைப்பை

என்னைக் கைவிட்டது
என் கைபேசி

அழையா விருந்தாளியாய்
அந்தத் தெருவின் நாய் என்னை நெருங்க
அடையாளம் கண்டு கொண்டது

வாரத்தில் ஓர் இரு நாட்கள்
விளையாட்டாய் அதற்கு அளித்த உணவுக்கு

நன்றி கடனாய் வால் ஆட்டி
நெருங்க நினைத்தவரிடம் குறைத்தும் பாய்ந்தும்
நான் அந்தத் தெருவைக் கடக்கும் வரை
நிழல் போல என்னைத் தொடர்ந்தது

அறியாமல் நான் செய்தத் தொண்டு
சரியான நேரத்தில் கைக் கொடுத்தது இன்று…

 

 

Aluvalaga velai mudindhu
Ayarndhu pona nilayil

Veetai nokki
Viraindhukondirukum velaiyil

Vilakkugal anaindhirundha saalai
Vinnil thuli velicham iladha maalai

Iruttin paadhayil
Iru sakkara vaganangal

Kudi bodhaiyil
Koothaadum manithargal

Kadandhu sella nenaikumbozhudhe
Kalangi nindradhu en kangal

Kaiyil irundhe ore ayudham
En Kaipesi

Tholaikatchiyin sathathil
Tholaipesiyin azhaipu ketkavillai
En annaiku

Alaipesiyin alaigal
Adaiya mudiyadhe tholaivil
En thandhai

Enneramum kadalai podum
En nanbargalum eduka villai
En azhaipai

Ennai kaivittadhu
En kaipesi

Azhaiyaa virundhaliyai
Andha theruvin naai ennai nerunga
Adaiyalam kandu kondadhu

Vaarathil orr iru natkal
Vilaiyaatai adharku alitha unavuku
Nandri kadanaai vaal aati
Nerunga ninaithavaridam kuraithum paindhum
Naan andha theruvai thaandum varai
Nizhal pola ennai thodarndhadhu

Ariyamal naan seidha thondu
Sariyana nerathil kai koduthadhu indru…

via Daily Prompt: Hopeful

Mail me your views in the comment box below  🙂

சிகப்பு ரோஜா ( Sigappu Roja)

பௌர்ணமித் திருநாளாம் இன்று
வானெங்கும் வெண்ணிலவு நிறைந்திருக்கும் என்று
விரைந்தோடி வந்தேன் கடற்கரைக்கு

ஒரு துளி வெளிச்சம் இல்லை
ஓயாத அலைகளும் துள்ளவில்லை
காரிருளில் மிதந்ததால் கடல் அன்னை

காலம் கடந்தது
காணும் எதிர்பார்ப்பும் கரைந்தது…

விடைபெறும் வேலையில்…

அலைகள் பொங்கி எழ
அதை உரசியக் காற்றுச் செல்லமாய்த் தொட்டுச் செல்ல

மேகங்கள் இடையே இருந்து
மங்கையின் முகம் போல வெட்கத்தில் சிவந்து
மெல்ல எட்டிப் பார்த்தது…

அந்தச் சிகப்பு ரோஜா… !

Pournami thirunaalam indru
Vaanengum vennilavu niraindhirukum endru
Viraindhodi vandhen kadarkaraiku

Oru thuli velicham illai
Oyadha alaigalum thullavillai
Kaarirulil midhandhadhal kadal annai

Kaalam kadandhadhu
Kaanum edhirpaarpum karaindhadhu…

Vidaiperum velayil…

Alaigal pongi ezha
Adhai urasiya kaatru sellamaai thottu sella

Meghangal idaiye irundhu
Mangaiyin mugam pola vetkathil sivandhu
Mella etti paarthadhu…

Andha sigappu roja…!

வாடாமல்… (Vaadaamal)

ஆழ்க்கடலில் உறங்கும் ஆதித்தியனை
அடைய முடியாது என்றறிந்தும்
அவனைச் சேரும் நாளிற்காக
ஆயுள் வரை காத்திருக்கும்
ஆம்பல்  மலரைப்  போல்
 
என் ஆழ் மனதில் உறங்கும்
எல்லை இல்லாக் காதலை
என்னவன் உணர்ந்து
என்னைச் சேரும் நாளிற்காக

நானும் காத்திருப்பேன்..வாடாமல் …!

 

Aazhkadalil urangum aadhithiyanai
Adaiya mudiyaadhu enru arindhum
Avanai serum naalirkaage
Aayul varai kaathirukum
Aambal malarai pola

En aazh manadhil urangum
Ellai illaa kaadhalai
Ennavan unarndhu
Ennai serum naalirkaage

Naanum kaathirupen… vaadaamal… !

உவகை(Uvagai)

சிமிட்டும் கண்களின்
சில்லென்ற பார்வையில்
சிறுதுளிகளாய் கறைந்தேன்
 
இரண்டு சிகப்பு முகில்கள் இடையே
ஒரு நொடி மின்னல் கீற்றுப்  போல
உன் புன்னகை
என்னைச் சிறைப்பிடித்தது
 
ஒவ்வொறு நொடியும் எனக்காக துடிக்கும் உன் இதயம்
அவள் என்றும் என்னவள் எனும் கர்வம் தந்தது
 
கோவில் கருவறையில் இருப்பவன் இறைவன் என்றால்
என் மன அறையில் இருக்கும் நீ தான் எனக்கு இறைவி
 
சட்டென்று வரும் என் கோவம்
உன்னைக் கண்டவுடன்
சிட்டென பறக்கும் அதிசயத்தின் பெயர் தான் காதலா…..

simittum kangalin
sillendra paarvaiyil
siru thuliyaai karainden

irandu sigappu mughilgal idaiye
oru nodi minnal keetru pola
un punnagai
ennai sirai pidithadhu…

ovvoru nodiyum enakaage thudikum un idhayam
aval endrum ennaval ennum gharvam thandhadhu

kovil karuvaraiyil iruppavan iraivan endraal
en mana araiyil irukum nee thaan enaku iraivi

sattendru varum en kovam
unnai kandavudan
sittena parakkum adhisayathin peyar thaan kaadhalaa…

முதல் காதல்

முதல் காதல் – ஒரு மழலையின் மொழி

 

பல மாதங்கள் காத்திருந்து
பற்பலத் தடைகள் கடந்து
ஒரு பயணத்தின் முடிவில் கண்டேன் அவளை

அடையாளம் கண்டது முகத்தினால் இல்லை
அவள் மெல்லிய தீண்டல்
நெடுநாள் கேட்டுப் பழகிய குரல்
என் மூச்சோடு கலந்த அவளின் சுவாசம்
இவை காட்டியது எனக்கு அவளை

சுற்றிலும் மக்கள்
சிரித்துப் பேசி
என்னிடம் அன்புக் காட்டினாலும்
என் மனம் நித்தம் நாடியது அவளை
அவளை மட்டுமே …

அவளோடு என் விழிகள் பல கதைப் பேசினாலும்
அவளின் மொழிப் பேசத் தெரியவில்லை எனக்கு

நாட்கள் வளர்ந்தது
நான் அவளோடு கொண்ட காதலும் வளர்ந்தது

ஒரு நாள் என் வாய்த் திறந்துப் பேசுவேன் என்று
ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் அந்த அழகுச் சிலை

என் காதலைச் சொல்லத் தேவை
மூன்று வார்த்தைகள் அல்ல
மூன்றே எழுத்துக்கள்
அம்மா …!

Mudhal kaadhal – oru mazhalaiyin mozhi

Pala maadhangal kaathirundhu
Parpala thadaigal kadandhu
Oru payanathin mudivil kanden avalai

Adaiyalam kandadhu mugathinal illai
Aval melliya theendal
Nedu nal kettu pazhagiya kural
En moochode kalandha avalin svaasam
Ivai kaatiyadhu enaku avalai

Sutrilum makkal
Sirithu pesi
Ennidam anbu kaatinalum
En manam nitham naadiyadhu avalai Avalai mattume…

Avalodu en vizhigal pala kadhai pesinalum
Avalin mozhi pesa theriyavillai enaku

Naatkal valarndhadhu
Naan avalodu konda kaadhalum valarndhadhu

Oru nal en vai thirandhu pesuven endru
Ovvoru naalum kathirukum andha azhagu silai

En kadhalai solla thevai
Moondru varthaigal alla
Moondre ezhuthukkal
Amma…!

சுதந்திரம்… (Sudhanthiram…)

 

கனவுகள் பல உண்டு 
கடைசி வரை அவை வெறும் கனவுகளே 

வெளி உலகைப் பார்க்கும் அனுமதி உண்டு 
வெளிச்சம் உள்ளவரை மட்டுமே 

மனதார வேண்டி பூஜை செய்ய உரிமை உண்டு 
மாதம் மூன்று நாட்கள் அதற்கும் தடையே 

அடிமைப் படுத்த 
ஆங்கிலேயர் இல்லை 
ஆண்கள் உண்டு 

சுதந்திரம்… 
இந்திய மண்ணுக்குத் தான் 
இந்தியப் பெண்ணுக்கு இல்லை… 

Kanavugal pala undu
Kadaisi varai avai verum kanavugale

Veli ulagai kaanum anumadhi undu
Velicham irukum varai mattume

Manadhaara vendi poojai seiya anumadhi undu
Maadhathil mundru natkal adharkum thadaiye

Adimai padutha
aangileyar illai
Aangal undu

Sudhanthiram…
Indhia mannuku thaan
Indhia pennuku illai…

 Photo courtesy : https://www.facebook.com/Unite-For-India

அவள் முகம் (Aval mugam)

 

13823318_1179117472108784_929279622_n.jpg

வான் உயர்ந்த மலைகளிலும்
வாகனம் நிறைந்த சாலைகளிலும்
 
தினசரி பார்க்கும் கண்ணாடியிலும்
தேகம் மறைக்கும் ஆடையிலும்
 
கைப்பேசி அழைப்பினிலும்
கடிகார முட்களிலும்
 
கரையோர அலைகளிலும்
கார் மேக மழைத் துளிகளிலும்
 
நெடுந்தூர பயணத்திலும்
நெஞ்சம் உருகும் பாடலிலும்
 
உண்ணும் உணவுப் பருக்கையிலும்
உறங்கும் பஞ்சு மெத்தையிலும்
 
பகலிலும் இரவிலும்
பார்க்கும் திசையெங்கும் அவள் முகம்
பரவசத்தில் பறக்க வைக்கும் என் மனதை
 
அதே மனம் இன்று
நரகத்தின் படுகுழியில் முட்டி இறந்தது
 
மலர் போன்ற அவள் முகத்தை
மலர் வளையங்கள் மத்தியில்
கல்லறையில் கண்ட போது…

 

Vaan uyarndha malaigalilum
Vaaganam niraindha saalaiyilum

Thinasari parkum kannadiyilum
Thegam maraikum aadaiyilum

Kaipesi azhaipinilum
Kadigaara mutkalilum

Karaiyore alaigalilum
Kaar megha mazhai thuliyilum

Nedunthoora payanangalilum
Nenjam urugum paadalilum

Unnum unavu parukkaiyilum
Urangum panju methaiyilum

Pagalilum iravilum
Paarkum thisai engum aval mugam
Paravasathil parakka vaikum en manadhai

Adhe manam indru
Naragathin padukuzhiyil mutti irandhadhu

Malar ponra aval mugathai
Malar valaiyangal maththiyil
Kallaraiyil kanda podhu…

 

Create a free website or blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: