மான் விழியால் உன்னை சிறையெடுக்க ஆசை

வான் மழையாய் உன்னை ஸ்பரிசிக்க ஆசை

 

இன்னிசையாய் ஒலிக்கும் நின் தேன்குழல் ஆக ஆசை

இனிய இதழ் தீண்டும் தேநீர் ஆக ஆசை

 

உன் கையில் தவழும் நாய் குட்டியாக ஆசை

உன் துன்பம் துடைக்கும் குட்டி தேவதையாக ஆசை

 

நேரம் காட்டும் உன் கைகடிகாரமாக ஆசை

நேரத்தை மறைக்கும் உன் நினைவுகளாக ஆசை

 

எல்லா நிலையிலும் உன்தன் துணை நிற்க ஆசை

எல்லையில்லா குறும்புகளின் குடியிடம் ஆக ஆசை

 

பகலும் இரவும் பறந்து போக ஆசை

பரணியில் நாம் மட்டும் தனித்து வாழ ஆசை

 

இவை பேராசை எனினும்….

என் பேரில் உன் பெயரைச் சேர்ப்பதே…

இப்பிறவியின் பேரின்ப ஆசை…

 

For people who find it difficult to read in tamil , here you go 🙂

Maan vizhiyaal unnai sirai edukka aasai

Vaan mazhaiyai unnai sparisikka aasai

 

Innisaiyai olikkum nin thaen kuzhal aaga aasai

Iniya idhazh theendum thaeneer aaga aasai

 

Un kaiyil thavazhum naai kutty aaga aasai 

Un thunbam thudaikkum kutty dhevadhai aaga aasai

 

Neram kaatum kai kadigaaram aaga aasai

Nerathai maraikum un ninaivugal aaga aasai

 

Ella nilaiyilum undhan thunai nirkka aasai

Ellai illaa kurumbugalin kudiyidam aaga aasai

 

Pagalum iravum parandhu poga aasai

Paraniyil naam mattum thaniththu vaazha aasai

 

Ivai peraasai eninum…

Un peril en peyarai serpadhe…

Ippiraviyin perinba aasai …

 

 

 

Advertisements