அளவில்லா அன்புடன் 
அடங்காத வெள்ளமாய் 
அன்று என்னிடம் வந்தாய் 

உனது அருமை அறியாமல் 
ஆணவத்தில் ஆடியவர்களுக்கு 
நல்ல பாடம் தந்தாய் 

தவித்தோம் … தத்தளித்தோம்… 
திசை எங்கும் தண்ணீர் இருந்தும் 
தாகத்தால் துவண்டோம்… 

போதும் உன் பாசம் 
என் ஊர் ஆனது நாசம் 
இனி தேவையில்லை உன் நேசம் 
எனத் துரத்தி அடித்தோம் அன்று… 

வான் எங்கும் நீ எங்கே என்று 
தேடுகிறோம் இன்று… 

ஆறு மாதம் கழித்தும் 
ஆறாத உன் சினம் கழியவில்லை 

நீயின்றி வாடியது 
மொட்டை மாடி மலர்கள் மட்டுமில்லை 
மக்களின் மனமும் தான்… 

காற்றெங்கும் உன் வாசம் வேண்டும் 
நிலம் எங்கும் உன் ஈரம் வேண்டும் 

நிற்கும் நடக்கும் பறக்கும் உயிர்களுடன் 
நானும் காத்திருக்கிறேன் 

நீ வருவாய் என… ! 

maxresdefault.jpg

 Alavilla anbudan
Adangadhe vellamaai
Andru Ennidam vandhai…

 

Unnadhu arumai ariyamal
Aanavathil aadiyavargaluku
Ariya padam thandhai…
 

Thavithom..thathalithom
Thisai engum thaneer irundum
Thaagathil thuvandom…
 

Podhum..un paasam
Enadhu oor aanadhu naasam
Ini thevayillai un nesam
Ene thurathi adithom andru…
 

Vaan engum nee engae endru
Thedigindrom indru…
Aaru maatham kazhindum
Aaradha un sinam kazhiyavillai
 

Neeyindri vaadiyadhu
Mottai maadi malargal mattumillai
Makkalin manamum dan
 

 Kaatrengum un vaasam vendum
Nilamengum un eeram vendum
 

Nirkum nadakum parakum uyirgaludan
Naanum kaathirukiren
Nee varuvai yena… !

https://dailypost.wordpress.com/prompts/hope/

Advertisements