1 )

கூண்டுக் கிளி தான் நான்…

பேசும் திறன் உண்டு
நினைத்ததைப் பேசும் அனுமதி இல்லை

ஆசைக் கனவுகள் உண்டு
அவை அனைத்தையும் அனுபவிக்கும் வாய்ப்புகள் இல்லை

பறந்து செல்ல சிறகுகள் உண்டு
சிறையை விட்டு வெளி வர வழி இல்லை

கூண்டுக் கிளி தான் நான்

இது நிரந்தரம் இல்லை
காலம் வரும் என் விடுதலைக்கு

இந்த உலகின் அழகைக் கண்களால் ரசிக்க
சுதந்திர காற்றை சுவாசிக்க
இறக்கை விரித்துப் புவி எங்கும் பறக்க
இந்தக் கூண்டின் கதவுகள் திறக்க
நேரம் வரும்.. அது வரையில்

கூண்டுக் கிளி தான் நான்…

bird-escape-97373083-resized

Koondu kili dan naan…

Pesum thiran undu
Ninaithadhai pesum anumadhi illai

Aasai kanavugal pala undu
Avai anaithum anubavika vaipugal illai

Parandhu sella siragugal undu
Siraiyai vitu veli vare vazhi illai

Koondu kili dan naan…

Aanaal idhu nirandharam illai
Kaalam varum en vidudhalaiku

Indha ulagin azhagai kangalal kandu rasika
Sudhanthira kaatrai suvasika
Irakkai virithu puvi engum parakka
Indha koondin kadhavugal thirakka
Neram varum… Adhu varaiyil

Koondu kili dan naan…

2)

எட்டி நின்று வேடிக்கை பார்க்க
நான் தரையோடு தவழும் பட்டுப் பூச்சி அல்ல

சுட்டெரிக்கும் சூரியனுக்குச் சவால் விடும் பருந்து
சிறகு விரிக்கக் காத்திருக்கிறேன்

விடியல் வரும் வரை… !

bald_eagle_adult2

Etti nindru vedikkai paarka
Nan tharaiyodu thavazhum pattu poochi alla

Sutterikum sooriyanuku savaal vidum parundhu
Siragu virikka kathirukiren

Vidiyal varum varai… !

Your feedbacks are welcome 🙂 Mail me your views personally through:

Advertisements