முதல் காதல் – ஒரு மழலையின் மொழி

 

பல மாதங்கள் காத்திருந்து
பற்பலத் தடைகள் கடந்து
ஒரு பயணத்தின் முடிவில் கண்டேன் அவளை

அடையாளம் கண்டது முகத்தினால் இல்லை
அவள் மெல்லிய தீண்டல்
நெடுநாள் கேட்டுப் பழகிய குரல்
என் மூச்சோடு கலந்த அவளின் சுவாசம்
இவை காட்டியது எனக்கு அவளை

சுற்றிலும் மக்கள்
சிரித்துப் பேசி
என்னிடம் அன்புக் காட்டினாலும்
என் மனம் நித்தம் நாடியது அவளை
அவளை மட்டுமே …

அவளோடு என் விழிகள் பல கதைப் பேசினாலும்
அவளின் மொழிப் பேசத் தெரியவில்லை எனக்கு

நாட்கள் வளர்ந்தது
நான் அவளோடு கொண்ட காதலும் வளர்ந்தது

ஒரு நாள் என் வாய்த் திறந்துப் பேசுவேன் என்று
ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் அந்த அழகுச் சிலை

என் காதலைச் சொல்லத் தேவை
மூன்று வார்த்தைகள் அல்ல
மூன்றே எழுத்துக்கள்
அம்மா …!

Mudhal kaadhal – oru mazhalaiyin mozhi

Pala maadhangal kaathirundhu
Parpala thadaigal kadandhu
Oru payanathin mudivil kanden avalai

Adaiyalam kandadhu mugathinal illai
Aval melliya theendal
Nedu nal kettu pazhagiya kural
En moochode kalandha avalin svaasam
Ivai kaatiyadhu enaku avalai

Sutrilum makkal
Sirithu pesi
Ennidam anbu kaatinalum
En manam nitham naadiyadhu avalai Avalai mattume…

Avalodu en vizhigal pala kadhai pesinalum
Avalin mozhi pesa theriyavillai enaku

Naatkal valarndhadhu
Naan avalodu konda kaadhalum valarndhadhu

Oru nal en vai thirandhu pesuven endru
Ovvoru naalum kathirukum andha azhagu silai

En kadhalai solla thevai
Moondru varthaigal alla
Moondre ezhuthukkal
Amma…!

Advertisements