Search

Sruthi (ஸ்ருதி)

Blend of thoughts in tamil and english

Category

Uncategorized

நா.முத்துகுமாருக்குச் சமர்ப்பணம் ( A tribute to Naa. Muthukumar )

On this day , 12 July  – Naa. Muthukumar(1975-2016), tamizh lyrcist’s birthday,  I would like to dedicate this article to one of the best lyricists tamil cinema witnessed who attracted young hearts with his simple yet soulful words and is currently being missed a lot.

காஞ்சிபுரத்தில் பிறந்து
முனைவர் எனும் புனைபெயர் அடைந்து
உன் தமிழ்ப் பயணத்தைத் தொடங்கினாய்

“நம்ம கலத்து மேடு.. கம்மா கரை கரிச காடு..
செம்மண் அல்லி தெளிக்கும் ரோடு…”

எனும் மண் வாசனையுடன் பிரபலமடைந்தாய்
எனக்கு ஏற்ற வரிகள் கிடைத்தது என ஆணவம் கொண்டது தமிழ் திரைப்பாடல்கள்
அதற்கு இரையானது இளம் நெஞ்சங்கள்
உறவுகளில் தான் உனக்கு எத்தனை ஈர்ப்பு…

காதலா நட்பா என தெரியாமல் தவிப்பவருக்கு,

“காதல் இல்லை
இது காமம் இல்லை
இந்த உருவுக்கு உலகத்தில் பெயர் இல்லை…”

“ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை”

-என அவன் துடிப்பையும்

“சாற்றி வாய்த்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்”

-என அவன் ஆவலையும்

“உன் கையில் சேர ஏக்கமில்லை
உன் தோலில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகமில்லையென்று பொய் சொல்ல தெரியாதடி..”

என்று அவன் மனதையும் சித்தரித்தது உன் மொழி

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
என போராடும் பெண்ணுக்கு ஊக்கம் அளித்தது

“அடங்காமலே… அலைபாய்வதேன்… மனம் அல்லவா..”

ஆம்… பெண் உள்ளமும் தெரிந்தவன் நீ

அவளின் ஆழமான காதலும்
அழியாத பாசமும்
ஐந்தே வார்த்தையில் அடங்கியது

“உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே…”

சமுதாயத்துடன் போராடும் காதலர்களை ஊக்குவிக்கும் வரிகள்

“மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்ட
நம் காதல் தடைகளைத் தாண்டும்”

இந்த வரிகளின் ஆழம்
கல்லையும் உருக்கும்

தவறு செய்து திருந்தும் உள்ளங்களுக்காக

“தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்…”

அந்த தெய்வமும் தோற்று போகும்
தந்தை அன்பின் முன்னே
என்று நெகிழ வைத்தாய்

தாய்ப் பாச பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் இந்தத் திரை உலகில்
தந்தைக்குத் தாலாட்டு தந்து நீயே தாய் ஆனாய்

“விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே…”

இந்த பாசத்திற்கு முன் எதுவும் பெரிதில்லை…

“கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி…”

ஆனந்த யாழை மீட்டி
முத்தான பாடல்கள் அளித்த நீ
மண்ணில் மறைந்தாலும்
மனதில் இந்த பாடல் வரிகளில் என்றும் வாழ்திருப்பாய்…!

Kaanchipurathil pirandhu
Munaivar enum punaipeyar adaindhu
Un thamizh payanathai thodanginaai

“Namma Kalathu Medu.. Kamma Karai Karisa Kaadu..
Semman Alli Thelikkum Roadu..”

Enum mann vasanaiyudan prabalamadaindhai
Enaku ettra varigal kidaithadhu ene aanavam kondadhu thamizh thirai paadalgal
Adharku iraiyaanadhu ilam nenjangal

Uravugalil dan unakku ethanai eerpu…

Kaadhala natpa ene theriyamal thavipavaruku,

“Kaadhal illai
Idhu kaamam illai
Indha uruvuku ulagathil peyar illai…”

“Oru murai dhaan pen paarpadhinaal varugira vali aval arivadhillai”

-ene avan thudipayum

“Saatri vaitha veetil dheepam etri veika nee vaa vaa
Meedhi vaitha kanavai ellam pesi theerkalam”

-ene avan aavalayum

“Un kaiyil sera ekkamillai
Un tholil saaya aasai illai
Nee pona pinbu sogamillai
Enru poi solla theriadhadi..”

-endru avan manadhaiyum sitharithadhu un mozhi

Pesigiren pesugiren un idhayam pesugiren
– ene poradum pennuku ookam alithadhu

Adangaamalae… Alaipaaivadhen… Manam allavaa..”

Aam… Pen ullamum therindhavan nee
Avalin aazhamaana kaadhalum
Azhiyaa paasamum
Aindhe vaarthaiyil adangiyadhu,

Un maarbil saayndhu saaga thonudhe…”

Samudhayathudan poradum kadhalargalai ookuvikkum varigal,

“Minsara kambigal meedhu
Mainaakkal koodu katta
Nam kaadhal thadaigalai thaandum

-Indha varigalin aazham kallaiyum urukkum

Thavaru seidhu thirundhum ullangalukage,

“Dheivam vazhvadhu engae
Thavarugalai unarum manidhan nenjil…”

Andha dheivamum thotru pogum
Thandhai anbin munne endru negizha vaithai

Thai paasa paadalgal matume olikum indha thirai ulagil
Thandhaiku thaalattu thandhu neeye thai aanai

“Vizhi oram eeram vandhu kudai ketkudhe…”

Indha paasathirku mun edhuvum peridhillai…,

Adi kovil edharku dheivangal edharku
Unadhu punnagai podhumadi
Indha mannil idhu pol yaruminge engum vazhavillai endru thonrudhhadi…”

Aanandha yaazhai meeti
Muthaana paadalgal alitha nee
Mannil maraindhaalum
Engal manadhil indha paadal varigalil endrum vaazhdhirupaai… !

lyrics647_081416021327

Songs referred in the above article:

 • Ballelaka – Sivaji
 • Nenjodu kalandhidu – kaadhal kondaen
 • Kan pesum varthaigal – 7g rainbow colony
 • En kaadhal solla – paiyaa
 • Pesugiren – satham podadhe
 • Unnale en jeevan – theri
 • Unakena irupen – kaadhal
 • Dheivam vazhvadhu engae – vaanam
 • Dheivangal ellam – kedi billa killadi ranga
 • Aariro aarariro – dheivathirumagal
 • Aanandha yaazhai – thanga meengal
Advertisements

The End Where I Begin

A thoughtful post !

 

Source: The End Where I Begin

சிகப்பு ரோஜா ( Sigappu Roja)

பௌர்ணமித் திருநாளாம் இன்று
வானெங்கும் வெண்ணிலவு நிறைந்திருக்கும் என்று
விரைந்தோடி வந்தேன் கடற்கரைக்கு

ஒரு துளி வெளிச்சம் இல்லை
ஓயாத அலைகளும் துள்ளவில்லை
காரிருளில் மிதந்ததால் கடல் அன்னை

காலம் கடந்தது
காணும் எதிர்பார்ப்பும் கரைந்தது…

விடைபெறும் வேலையில்…

அலைகள் பொங்கி எழ
அதை உரசியக் காற்றுச் செல்லமாய்த் தொட்டுச் செல்ல

மேகங்கள் இடையே இருந்து
மங்கையின் முகம் போல வெட்கத்தில் சிவந்து
மெல்ல எட்டிப் பார்த்தது…

அந்தச் சிகப்பு ரோஜா… !

Pournami thirunaalam indru
Vaanengum vennilavu niraindhirukum endru
Viraindhodi vandhen kadarkaraiku

Oru thuli velicham illai
Oyadha alaigalum thullavillai
Kaarirulil midhandhadhal kadal annai

Kaalam kadandhadhu
Kaanum edhirpaarpum karaindhadhu…

Vidaiperum velayil…

Alaigal pongi ezha
Adhai urasiya kaatru sellamaai thottu sella

Meghangal idaiye irundhu
Mangaiyin mugam pola vetkathil sivandhu
Mella etti paarthadhu…

Andha sigappu roja…!

வாடாமல்… (Vaadaamal)

ஆழ்க்கடலில் உறங்கும் ஆதித்தியனை
அடைய முடியாது என்றறிந்தும்
அவனைச் சேரும் நாளிற்காக
ஆயுள் வரை காத்திருக்கும்
ஆம்பல்  மலரைப்  போல்
 
என் ஆழ் மனதில் உறங்கும்
எல்லை இல்லாக் காதலை
என்னவன் உணர்ந்து
என்னைச் சேரும் நாளிற்காக

நானும் காத்திருப்பேன்..வாடாமல் …!

 

Aazhkadalil urangum aadhithiyanai
Adaiya mudiyaadhu enru arindhum
Avanai serum naalirkaage
Aayul varai kaathirukum
Aambal malarai pola

En aazh manadhil urangum
Ellai illaa kaadhalai
Ennavan unarndhu
Ennai serum naalirkaage

Naanum kaathirupen… vaadaamal… !

The girl with tender eyes

In our day to day lives, we meet few people from whose faces we can determine their pains, their dreams and their longing for a happy life. This was one among them…

Source: The girl with tender eyes

நீ வருவாய் என(Nee varuvaai yena)

அளவில்லா அன்புடன் 
அடங்காத வெள்ளமாய் 
அன்று என்னிடம் வந்தாய் 

உனது அருமை அறியாமல் 
ஆணவத்தில் ஆடியவர்களுக்கு 
நல்ல பாடம் தந்தாய் 

தவித்தோம் … தத்தளித்தோம்… 
திசை எங்கும் தண்ணீர் இருந்தும் 
தாகத்தால் துவண்டோம்… 

போதும் உன் பாசம் 
என் ஊர் ஆனது நாசம் 
இனி தேவையில்லை உன் நேசம் 
எனத் துரத்தி அடித்தோம் அன்று… 

வான் எங்கும் நீ எங்கே என்று 
தேடுகிறோம் இன்று… 

ஆறு மாதம் கழித்தும் 
ஆறாத உன் சினம் கழியவில்லை 

நீயின்றி வாடியது 
மொட்டை மாடி மலர்கள் மட்டுமில்லை 
மக்களின் மனமும் தான்… 

காற்றெங்கும் உன் வாசம் வேண்டும் 
நிலம் எங்கும் உன் ஈரம் வேண்டும் 

நிற்கும் நடக்கும் பறக்கும் உயிர்களுடன் 
நானும் காத்திருக்கிறேன் 

நீ வருவாய் என… ! 

maxresdefault.jpg

 Alavilla anbudan
Adangadhe vellamaai
Andru Ennidam vandhai…

 

Unnadhu arumai ariyamal
Aanavathil aadiyavargaluku
Ariya padam thandhai…
 

Thavithom..thathalithom
Thisai engum thaneer irundum
Thaagathil thuvandom…
 

Podhum..un paasam
Enadhu oor aanadhu naasam
Ini thevayillai un nesam
Ene thurathi adithom andru…
 

Vaan engum nee engae endru
Thedigindrom indru…
Aaru maatham kazhindum
Aaradha un sinam kazhiyavillai
 

Neeyindri vaadiyadhu
Mottai maadi malargal mattumillai
Makkalin manamum dan
 

 Kaatrengum un vaasam vendum
Nilamengum un eeram vendum
 

Nirkum nadakum parakum uyirgaludan
Naanum kaathirukiren
Nee varuvai yena… !

https://dailypost.wordpress.com/prompts/hope/

Hello folks!

This blog will hold posts in both english and tamil. Hope language is a not a limit to sharing. Happy reading 🙂

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: